search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர் தற்கொலை"

    நெய்வேலியில் தந்தை கண்டித்ததால் நீட் தேர்வு பயிற்சி பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின். இவர் என்.எல்.சி.யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் நிதின் வர்மா (வயது 19). இவர் பிளஸ்-2 படித்துள்ளார். நிதின் வர்மா தற்போது பெங்களூரில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நீட் தேர்வு பள்ளியில் விடுமுறை எடுத்து கொண்டு நிதின்வர்மா பெங்களூருவில் இருந்து நெய்வேலிக்கு புறப்பட்டார். நேற்று முன்தினம் நிதின் வர்மா சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த ஜெஸ்டின் தனது மகன் நிதின் வர்மாவை எதற்காக அடிக்கடி விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வருகிறாய். இங்கு வருவதுக்கு பதில் அங்கிருந்து நன்றாக படி என கூறி கண்டித்தார்.

    இதில் மனம் உடைந்த நிதின் வர்மா வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் தூக்குபோட்டு நிதின் வர்மா தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியே சென்ற நிதின் வர்மாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். அப்போது நிதின்வர்மா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய நிதின் வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை கண்டித்ததால் நீட் தேர்வு பயிற்சி பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூரில் சிலை அலங்காரத்தை மாற்றியதால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் 15.வேலம் பாளையம் சோலி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ். பனியன் தொழிலாளி. இவரது மகன் நவீன்குமார் (வயது 15). அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நவீன்குமார் சிகை அலங்காரத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். தலை முடியை ஸ்டைலாக அடிக்கடி மாற்றி வந்தார். கோடை விடுமுறையையொட்டி தற்போது புதிய ஸ்டைலில் முடி வெட்டி இருந்தார். இதை பெற்றோர் கண்டு கொள்ளவில்லை.

    வரும் 1-ந்தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட உள்ளது. வித்தியாசமாக முடிவெட்டி இருப்பதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். முடியை அழகாக வெட்டிக்கொள் என்று தந்தை கூறி வந்தார். ஆனால் மகன் மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மகனை கட்டாயமாக சலூன் கடைக்கு அழைத்துச்சென்று முடியை பள்ளிக்கு செல்லும் அளவுக்கு வெட்டுமாறு கூறினார். கடைக்காரரும் அப்படியே வெட்டினார். தனக்கு பிடித்த ஸ்டைலில் வைத்திருந்த முடி போய்விட்டதே என்று மாணவர் நவீன்குமார் விரக்தியில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் நவீன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×